tamilnadu

செவிலியர் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

சேலம், டிச.21- சேலம் ஸ்ரீ கோகுலம் செவிலியர் கல் லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவி யருக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சனி யன்று நடைபெற்றது. சேலம் ஸ்ரீ கோகுலம் செவிலியர் கல் லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு மகப்பேறு மருத்துவரும், இயக்குனருமான செல்லம்மாள் தலைமை தாங்கினார். செவிலியர் துறையில் தனது வாழ்வை அர்ப்பணித்து சேவையாற் றிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை யாரை நினைவு கூர்ந்து உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.  இதில் முதன்மை விருந்தினராக கோய முத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் மருத்துவர்  நிர்மலா, கோகுலம் செவிலியர் கல்லூரியில் முதல்வர்  மருத்துவர் தமிழரசி ஆகியோர் பங்கேற் றனர். மேலும் செவிலியர் பணியின் சிறப் பினை எடுத்துரைத்து அர்ப்பணிப்பு உணர் வோடும், தூய சிந்தனையோடும் செய லாற்ற வேண்டுமென மாணவ, மாணவி களை ஊக்குவித்தனர். இந்நிகழ்ச்சியில் 2019ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பு  முதலாமாண்டு மாணவ, மாணவியர் 58 பேர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த நிகழ்வில் மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.