சேலம், மே 31 - சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்தாவது, சேலம் மாவட்டத் தில் பணிபுரிந்து வந்த ஒடிசா, சிக்கிம், ராஜஸ் தான், உத்தரபிரதேஷ், நாகாலாந்து, மிசோ ராம், மணிப்பூர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்முகாஷ்மீர், டெல்லி, மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மொத்தம் 6 ஆயிரத்து 305 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த விருப் பத்தின் அடிப்படையில் விருப்பம் தெரி வித்ததை தொடர்ந்து அந்தந்த மாநி லங்களின் அனுமதியோடு அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சொந்த மாநிலம் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சேலம் மாவட் டத்தில் உள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் அரங் கம், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சேலம் சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி, ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத் தும் செய்து கொடுக்கப்பட்டது. இவர்க ளுக்குப் பேருந்து வசதி, தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதி களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங் கப்பட்டு வருகிறது. இதுதவிர பல் வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 302 தொழிலாளர்கள் சேலம் மாவட்டத் திற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் அனை வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.