tamilnadu

img

கன்னங்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆவேச ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக. 17- கொரோனா பொதுமுடக்க காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், வீட்டு வரி, குடிநீர் கட் டணத்தை உயர்த்திய கண்ணங்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசின் அநியாய மின்கட்டண உயர்வை கண்டித்தும், வேலையிழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவார ணங்களை வழங்க வேண்டும். கன்னங் குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தியதை திரும் பப் பெற வேண்டும். கன்னங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலி யர் காலிப்பணியிடங்களை நிரப்பி, ஈசிஜி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் கன்னங்குறிச்சி கிளையின் சார்பில் கன்னங் குறிச்சி மின்சார உதவி பொறியாளர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கட்சி யின் கன்னங்குறிச்சி கிளையின் மூத்த தலை வர் என்.இருசாக்கவுண்டனர் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.சந்திரன், தாலுகா செய லாளர் கே.எஸ்.பழனிசாமி, தாலுகாகுழு உறுப்பினர் சி.மயில்வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;