tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 25-  சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நல வாரியம் அமைத் திட வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கொரோனா வைரஸ் பேரிடர் நிதியாக மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500மும், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச்சட் டங்களை திருத்தக் கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில், சேலம் சேகோசர்வ் குடோன்களில் நான்கு மையங்க ளிலும், பால் மார்க்கெட், ஏஆர்சி டிரான்ஸ்போர்ட், கொளத்தூர், மளிகை பஜார், கெங்கவல்லி, நேரடி நெல் கொள்முதல் மையம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆறுமு கம், மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, ஈஸ்வரன், செல் வகுமார், கிருஷ்ணன், கோவிந்த ராஜ், கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் மேட் டூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர் வாகி  சி.கருப்பண்ணன்,  மாரியப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;