tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பாரபட்சம் சேலத்தில் திமுக எம்.பி போராட்டம்

சேலம், டிச.21- உள்ளாட்சித் தேர்தல் களில் நடைபெறும் முறை கேடுகளை கண்டுகொள் ளாத மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும் என  வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில்  அமர்ந்து திமுக எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், தேர்தல் பார்வையாளராக நியமிக் கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி காமராஜூ ஆகியோர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்   மக்கள் பிரதிநிதியாக உள்ள தன்னை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திக்க மறுப்பு தெரிவித்ததை கண்டித்து வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார். செய்தியாளர்களிடம் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் திமுக மேற்கு மாவட்ட  செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகி யோர் கூறும்போது, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்தபோதும் காரண மின்றி பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதற்கு உரிய விளக்கம் தரவில்லை. இது தொடர்பாக விசாரிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட  முயன்றும் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வை யாளர்கள் இருவருமே தங்களை சந்திக்க மறுத்து வருகின்றனர்.  இதையடுத்து ஆட்சியர் வந்து சந்திக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும், தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டமாக உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் மறை முகமாக பணியாற்றுகிறார்கள். அதிமுக வின் வெற்றிக்கு மட்டுமே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வை யாளர் காமராஜ் ஆகிய இருவரும் முக்கிய  காரணம். ஆகவே இவர்களை தேர்தல்  ஆணையம் உள்ளாட்சி தேர்தல் பணியில்  இருந்து விடுவித்து ஜனநாயக முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

;