tamilnadu

img

இந்தியன் ஆயில் பிளான்ட் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கிடுக சிஐடியு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 7- சேலத்தில் உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டலிங் பிளான்டில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆலை திறக்கப்படும் போது மீண்டும் வேலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரம் கருப்பூர் அருகே 1983 ஆம் ஆண்டு எல்பிஜி பிளான்ட் அமைக்கப்பட்டது. இதில் 32 வருடங்களாக பணியாற் றிய ஒப்பந்த தொழிலாளர்களை  ஐஓசி நிறுவனம் நிரந்தரப்படுத் தாமல் ஒப்பந்த தொழிலாளர் களாக வேலை வாங்கி வந்தது. இந் நிலையில் அங்கு விரிவாக்க பணி கள் செய்யப்பட்டு தற்போது புதிய பொலிவுடன் ஆலை செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதில், ஆலை மூடிய போது பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களையும், அங்கு பணியாற்றி ஒய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த் ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநில குழு உறுப்பினர் எஸ். கே.தியாகராஜன் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் பொதுச் செய லாளர் கே.விஜயன், செயலாளர் சேகர்,  சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம், சிபிஎம் ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியா கவுன்டர் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

;