tamilnadu

img

சிஐடியு தோழர் காலமானார்

சேலம், அக்.4- தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சேலம் கோட்ட துணைத் தலை வரும் திருச்செங்கோடு பணி மனையின் தொழில்நுட்ப உத வியாளருமான தோழர் வி.தீன தயாளன் அக்.4 ஆம் தேதி ஞாயி றன்று காலமானார். அவரின் உடலுக்கு சிபிஎம் மத்திய குழு உறுப்பினரும் சிஐடியு மாநி லத் தலைவருமான அ.சவுந்தரராஜன், சாலைப் போக்குவ ரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியா கராஜன், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரங்கசாமி,நாமக்கல் சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் கோட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலை வர் செம்பான் உள்ளிட்ட மைய சங்க நிர்வாகிகள்கிளை நிர்வாகிகள் எண்ணற்றோர் அஞ்சலி செலுத்தினர்.