tamilnadu

img

வங்கி சேவை குறித்த விழிப்புணர்வு முகாம்

சேலம், அக். 5- அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவை விழிப்புணர்வு முகாம் மற்றும்  கடன் உதவி வழங்கும் விழா நடை பெற்றது. வங்கி சேவைகள் பொதுமக்க ளுக்கு எளிதாக கிடைக்கும் நோக்கில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கடன்  உதவி வழங்கும் விழா, வங்கி சேவை  குறித்த விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்த முகாமில் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றன. இந்த முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், வேளாண்மை கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கரு விகள் பற்றிய ஆலோசனைகளை யும், பல்வேறு சுய உதவிக் குழுக்கள் விவசாய கடன்கள், வாகன கடன்கள் என பல்வேறு உதவிகளையும் பய னாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் யூனி யன் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல பொது மேலாளர் லால் சிங், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் செல்வராஜ் உள் ளிட்ட வங்கி அதிகாரிகள், அரசு துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூரில் கார்ப்பரேசன் வங்கி சார்பில் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் கூட்டமைப்பு இணைந்து அமைக்கப்பட்டிருந்த சிறு, குறு  தொழில், வீடு, வாகனம், விவசாயம் மற்றும் தனி நபருக்கான கடனுதவி களை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் வழங்கினார். இதில்  கார்ப்பரேசன் வங்கி பொது மேலாளர் ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்திய மூர்த்தி மற்றும் வங்கியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.