tamilnadu

img

சேலத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி

சேலம், செப்.3- சேலத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி செவ் வாயன்று நடைபெற்றது.  கருவிழியில் ஏற்படும்  பாதிப்பு பார்வை இழப் பிற்கு முக்கிய காரணி யாகும். இந்தியாவில் இந்த பிரச்சனையில் 68  லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் 30 லட்சம் பேருக்கு கரு விழி மாற்று அறுவை  சிகிச்சை செய்தால்  மீண்டும் பார்வை கிடைக்கும். மேலும்,  இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும்  சராசரியாக 30 ஆயிரம் பேர் பார்வையை  இழந்து தவிக்கிறார்கள். இதை யடுத்து, இந்தியாவில் பொதுமக்களுக்கு கண் தானத்தின் அவசியம் மற்றும்  கண் தானம் செய்வதினால் ஏற்படும்  பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தேசிய கண்ணொளி  திட்டத்தின் கீழ் 34வது கண்தான இருவார விழா அனுசரிக்கப்பட்டது.   இதையொட்டி சேலம் அரசு பொது  மருத்துவமனை வளாகத்தில் செவ்வாயன்று  கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற் ற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வீதி நாடகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கண்தான விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைக ளை ஏந்திச் சென்றனர்.