tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு

சேலம், ஜூன் 19 - நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கெங்க வல்லி ஒன்றியத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து கிராமப்புற மக்களுக்கும் நூறு நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்.  குடிநீர் இல்லாத ஊராட்சிகளுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும். மே 18 ஆம் தேதி தேர்தல் விடு முறை அன்று 100 நாள் வேலை அட்டை  வைத்துள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என அரசு ஆணை இருந்தும் நிர்வாகம் சம்பளம் வழங்கப் படவில்லை. உடனே மே 18 ஆம் தேதிக்கு 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.  மேலும் பட்டா இல்லாத மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடு இல் லாத மக்களுக்கு  வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கெங்கவல்லி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு வெங்கடாசலம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.தங்கவேல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செய லாளர் ஜி.கணபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங் கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதில் சிபிஎம் கெங்கவல்லி செயலாளர் ஜோதி குமார்,  ஜி.பி.ராஜகோபால், ஏ. நடராஜன் மற்றும் ஜி.கருத்தா பிள்ளை உள்ளிட்டு விவசாய தொழிலாளர்கள்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

;