tamilnadu

சேலத்தில் 4,700 பேருக்கு காச நோய் பாதிப்பு

சேலம், ஜன.2- சேலம் மாவட்டத்தில் 4,700 பேருக்கு காச நோய் பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் 2025ஆம் ஆண்டு காச  நோய் இல்லாமல் செய்திடும் நோக்கில் தேசிய காசநோய் தடுப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் காசநோய் மற்றும் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், குணம் பெற்ற காச நோயாளிகள் கொண்ட 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக  சென்று காசநோய் அறிகுறிகள் உள்ள வர்களைக் கண்டறிந்து சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக்கூடம் மூல மாகவும் கண்டறியப்பட்டு வருகிறது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,  காசநோய் அறிகுறிளாக இரண்டு வாரம்  தொடர் இருமல், சளி, காய்ச்சல், பசி யின்மை, எடை குறைதல் ஆகியவை காணப் படும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சளி பரிசோதனை செய்து காசநோய் இருப்பின்  இலவசமாக காசநோய் எதிர்ப்பு மருந்துகள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நடத்திய முகாமில் மாவட்டத்தில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காசநோய் அறிகுறிகள் உள்ள 1,348  பேரை கண்டறிந்துள்ளோம். இதில் 113 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 4,796 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப் பட்டு வருகிறது. காசநோய் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் கைக் குட்டைகள் வைத்திருக்க வேண்டும் என  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  சத்தான உணவுகள் எடுத்து கொள்ள அரசின் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

;