“போராட்டத்தால் மட்டுமே உரிமைகளை வெல்லலாம்; ஆட்சியாளர்களின் கருணையால் அல்ல!” காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேச்சு
மதுரையில் நடை பெறவுள்ள சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் திறந்த வெளி கருத்தரங்கமும், நிதி யளிப்பு பொதுக்கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெற்றன. காஞ்சி புரம் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆற்றிய உரை யின் சுருக்கம் வருமாறு: சமத்துவ
சமுதாயத்துக்கான போராட்டம்
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை கொள்கை ‘சமத்துவம்’. இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்கள் அனை வருக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது இலட்சியம். இதற்காக 100 ஆண்டுகளாக செங் கொடியின் கீழ் அணி திரட்டும் பணியை கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டுள் ளது. ஆனால் இன்று, சாதி, மதம், மொழி போன்ற பிள வுகளால் உழைப்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிளவுகளை முறியடித்து, சுரண்டல் அமைப்பை எதிர்க்க ஒன்றுபட வேண்டும்!
மூடநம்பிக்கைகளும், கும்பமேளா மோசடிகளும்
“இன்று இந்தியா மூட நம்பிக்கைகளின் கோளோச் சும் நாடாக மாறிவருகிறது. பிரதமர்மோடி கும்ப மேளாவை ‘உலகத்திற்கு உத்வேகம்’ என்று பேசுகிறார். ஆனால் உண்மை என்ன? ஒரு படகோட்டியவருக்கு ரூ.32 கோடி வருமானம் வந்த தாகவும், அதில் பாதி வரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்ட பின்தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது! இது அயோக்கி யத்தனத்தின் உச்சம்.மத நம்பிக்கைகளைப் பயன் படுத்தி கோடிகளை சுரண்டும் இந்தசூழ்ச்சிக்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்.” “இன்று விவசாயிகள் உற்பத்தி செய்யும் 800 வகைப் பயிர்களில் 23க்கு மட்டுமே குறைந்தபட்ச விலை உத்தரவாதம் உள்ளது. மீதமுள்ளவற்றுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இடைத்தரகர்கள் குறைந்த விலைக்குவாங்கினாலும், அது குற்றமாக கருதப்படுவ தற்கான சட்டம் இல்லை! 2016ல் பிரதமர் மோடி ‘2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்’ என்று உறுதியளித்தார். ஆனால் இன்று வரை ஒரு நடவடிக்கையும் இல்லை. மாறாக, விவசாயிகளின் வருமானம் குறைந்து கொண்டே போகிறது. நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் கூட்டுப்போராட்டம் நடத்தியே இந்த உரிமையை வெல்ல முடியும்!”
தொழிலாளர் ஒற்றுமையே பலம்!
“தொழிலாளர் விரோத சட்டங்கள் இன்று தலைமேல் தொங்கும் வாளாக உள்ளன. இந்திய தொழிலாளர் வர்க்கம் ஒன்று பட்டால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். ஆட்சியாளர்க ளின் கருணையால் எதுவும் கிடைக்காது. போராட்டத்தால் மட்டுமே உரிமைகளைப் பெற முடியும்! தொழிலாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வேலைப் பாது காப்பு, ஊதிய உத்தரவாதம் போன்றவை கட்சி மூலம் கிடைப்பதில்லை. கூட்டுப் போராட்டம் மூலமே இவற்றை அடைய முடியும்!”
அந்நிய மூலதனம் (vs) தொழிலாளர் நலன்
“அந்நிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் போது, இந்திய தொழி லாளர் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற நிபந்த னையை அரசு விதிக்க வில்லை. இது தொழிலா ளர்களின் நலன்களை பலிகொடுக்கும் சூழலை உருவாக்கும். குறைந்தபட்சம், நமது சட்டங்க ளை அந்நிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!” இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமை தாங்கி னார். மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் வரவேற்றார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.சங்கர், பி.ரமேஷ், ஆர்.சௌந்தரி, ஆர்.மதுசூதனன், வட்டச் செயலாளர்கள் ப.வடிவேலன், கே.அண்ணா துரை, கே.பழனி, இ.வி நாயகமூர்த்தி ஆகியோர் பேசினர். மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.