tamilnadu

img

தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக... கருப்புப் பட்டை அணிந்து செப். 17ல் போராட்டம்

சென்னை:
தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி செப்.17 அன்று தமிழகத்தில் 2000 மையங்களில் கருப்புப் பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசே, தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாதே,என்கிற முழக்கங்களோடு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் என்ற பொதுப் பெயரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் ,தியாகி இமானுவேல் பேரவை,அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம்,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ,ஆதித்தமிழர் பேரவை ,ஆதிதமிழர் கட்சி ,தமிழ் புலிகள், திராவிட தமிழர் கட்சி ,சமூக நீதி கட்சி,பீம்சேனா  ,அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம், வன வேங்கைகள் கட்சி , ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை ,நீலப்புலிகள் இயக்கம் ,தூய்மைப் பணியாளர் சங்கம் ,இரட்சணிய சேனை சமுதாய நல அமைப்பு, தம்மம் சிந்தனையாளர் பேரவை ,தமிழ் சிறுத்தைகள் கட்சி ,பழங்குடி பாரதம் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் ஒருங்கிணைத்து செப்டம்பர் 17 தந்தைப் பெரியார் பிறந்த தினத்தில் தமிழகத்தில் 2000 க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளனர்.

பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு வழங்கிட வேண்டும் என இக்கூட்டியக்கத்தின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

;