tamilnadu

img

உலக விருதுகளைப் பெறும் மீனா குறும்படத்திற்கு தமுஎகச பாராட்டு

சென்னை, ஜூலை 8- சென்னை திரைப்படச் சங்கத்தின் கிளைத்தலைவர் தனசேகர் இயக்கத்தில் உருவான  “மீனா’’ குறும்படம் வடஅமெரிக்கா தமிழ் சங்கங்களின் பேரவை நடத்திய 2019ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது  இப்படம் கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற அடூர் உலக திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது. இம்மாதம் நடைபெற்றுவரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய குறும்படம் மற்றும் ஆவணப்பட போட்டியில் முதல் பரிசையும் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 12வது சர்வதேச ஆவணம் மற்றும் குறும்படத்திற்கான திரைவிழாவிலும், செர்பியாவில் நடைபெற்ற மார்ட்டோடஸ்கி திரைப்பட விழாவிலும், புனேவில்  நடைபெற்ற PIMPRI-Chinchwad உலக குறும்பட விழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டுள்ளது.  சென்னை அடித்தள மக்களின் வாழ்வியல் பிரச்சனையை பேசும் மீனா குறும்படத் தயாரிப்பில் உடன் இருந்து உழைத்த தமுஎகச, சென்னை திரைப்படச் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் யாக்னா, பிரதீப், வசந்த், குருமூர்த்தி, பாண்டு, வசுமதி, விபூஸ்ணன் ஆகிய அனைவருக்கும் தமுஎகச மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.