tamilnadu

img

மும்மொழி கொள்கையை ஏற்கிறாரா முதல்வர்?

அதேசமயம், மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான பிரிவில், இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தியை கற்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையில் மட்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என பிரித்துக்குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அத்தகைய வகைப்பாடு மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் பலர், “மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம் என பரிந்துரை மாற்றிய
மைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்தான்” என்று இந்தத் திருத்தத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறமாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் வைப்பது என்பது மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதுபோன்றே படுகிறது. இது ஆபத்தானது. பிற மாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைத்தால், தமிழ்நாட்டில் இந்தியை தேர்வு மொழியாக வைக்கலாம் என்றஓர் உள்கருத்தும் இதில் புலப்படுகிறது.

எனவே முதல்வரின் கருத்து மும்மொழிக்கொள்கையை வழிமொழிவது போலவேஇருக்கிறது. இதுபற்றி முதல்வர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று  கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.பிற மாநிலங்களில் தமிழை விருப்பப்பாடமாக சேர்க்க வேண்டும் என்பது,மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகும், என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பதிவை நீக்கிய முதல்வர்
இந்நிலையில், சர்ச்சை எழுந்த சூழலில், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து புதன் காலையில் தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவை மாலையில் முதல்வர் பழனிசாமி நீக்கியுள்ளார்.அவர் நீக்கியதற்கு காரணம், மும்மொழிக் கொள்கை பற்றிய தெளிவு பிறந்ததால் அல்ல; பிரதமர் மோடியை நேரடியாக டேக் செய்து தமிழைக் கற்றுத் தாருங்கள் என்று பதிவிட்டிருந்த காரணத்தால், அதை நீக்குமாறு முதல்வருக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும்அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

;