tamilnadu

வழக்கறிஞர்களுக்கு வெள்ளை நிற ஆடை: பார் கவுன்சில் அறிவுறுத்தல்

சென்னை:
கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக, உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் வாதாடும் அனைத்து வழக்குரைஞர் களும் இனி வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும் எனத் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, கரோனா வைரஸை  ஈர்க்கும் தன்மை கறுப்பு நிற அங்கிக்கு இருப்பதால் வழக்குரை ஞர்கள் உடை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவின் காரணமாக, உயர் நீதிமன்றம், கீழமை 
நீதிமன்றங்களில் தீர்ப்பாயம், ஆணையங்களில் முன்னிலையாகும் வழக்குரைஞர்கள் இனி கறுப்பு அங்கிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.ஆண் வழக்குரைஞர்கள் வெள்ளை நிற சட்டையும், பெண் வழக்குரைஞர்கள் வெள்ளை நிற புடவை அல்லது சல்வார் கமீஸ் அணிந்தும் பங்கேற்க வேண்டும். மறு உத்தரவு வரும்வரை கறுப்பு நிற அங்கிகள் அணிவதைத் தவிர்த்து, புதிய உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;