tamilnadu

img

விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு

சென்னை, ஜூலை 9- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10)  நடைபெறுகிறது. இதற்கான முன்  னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட  ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்ட ணியின் சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாய கக் கூட்டணியில் பாமக வேட்பாளர்  அன்புமணி , நாம் தமிழர் கட்சி வேட்  பாளர் அபிநயா மற்றும் சுயேச்சை கள் உட்பட 29 பேர் போட்டியிடு கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான  அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக ஆகிய கட்சி கள் இந்த இடைத் தேர்தலை புறக்க ணித்துள்ளன. வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளை யும் காவல்துறையினர் துணை யுடன் தேர்தல் ஆணையம் செய் துள்ளது.

காலையில் 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 16  ஆயிரத்து 962 ஆண் வாக்காளர் களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40  பெண் வாக்காளர்களும், திருநங் கைகள் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்காக 276 வாக்  குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. 662 வாக்குப்பதிவு கருவிகள்,  330 கட்டுப்பாட்டு கருவிகள், 357  வாக்குப்பதிவை உறுதி செய்யும்  கருவிகள் என மொத்தம் 1,349  மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவுக்கான பொருட்கள் துப்பாக்கி ஏந்திய காவ லர் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்  சாவடி மையங்களுக்கு கொண்டு  செல்லப்பட்டது. இந்த மொபைல்  வாகனத்தை மாவட்ட தேர்தல் அதி காரி சி.பழனி செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) கொடியசைத்து அனுப்பி  வைத்தார். பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53  நுண்பார்வையாளர்கள் பணியில்  அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன்  பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடி களை கூடுதல் கண்காணிப்பு மேற்  கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்  பட்டுள்ளது.

விடுமுறை

இடைத் தேர்தல் நடைபெறுவ தால் தொகுதிக்கு உட்பட்ட அரசு,  அரசு சார் அலுவலகங்கள், தனியார்  அலுவலகங்கள், பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் எண்ணப் படுகிறது. அங்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மையம் அமைக் கப்பட்டுள்ளது.