tamilnadu

விழுப்புரம் மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

செஞ்சி அருகே  ரூ. 17.80 லட்சம் பறிமுதல்

விழுப்புரம். அக்.11- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோழிப்  பண்ணை பேருந்து நிலையத்தில் தேர்தல் நிதி கண்காணிப்புக்  குழு வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் செஞ்சி நெடுஞ்சாலையில் சோதனை நடந்தது. அப்போது செஞ்சி மார்க்கத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த கோவிந்த ராஜன் என்பவரின் காரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை  பறி முதல் செய்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஒப்படைத்தனர். தனது மகள் மஞ்சள் நீராட்டுவிழா விற்கு நகை வாங்க சென்றதாகவும், ஆரணியில் உள்ள உற வினர்கள் வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு வருவதாகவும் பணம் கொண்டுவந்த கோவிந்தராஜன் விசாரணையில் கூறிய தாக தெரிகிறது.

கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி

மதுரை, அக்.11- மதுரை அலங்காநல்லூரை அடுத்துள்ள இடையப்பட்டி யை சேர்ந்தவர் நாகரத்தினம்.(45). இவர் செவ்வாயன்று குற வன்குளம் பகுதியில் செல்லும் பெரியாறு கால்வாயில் கை-கால்களை கழுவியுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக கால் தவறி வழுக்கி விழுந்தார். இதில் படுகாய மடைந்த நாகரத்தினம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;