tamilnadu

உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

கருங்கற்கள் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 11- கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தனந்தல் அணை கால்வாய் பகுதியில் இருந்த கருங்கற்  களை திருடியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பி உள்ளார். உளுந்தூர்பேட்டை வட்டம் ஆத்தூர் ஊராட்சியின் அருகில் அமைந்துள்ளது புத்த னந்தல் அணை. பல ஆண்டுகளாக செயல்  படாமல் இருந்த இந்த அணை மற்றும் பாசன  கால்வாய்களை சீர்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, அப்பகுதி விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு 60 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அணை நீர்வரத்து கால்வாயில் உள்ள பழைய  கருங்கற்களை அகற்றிவிட்டு கான்கிரீட்  முறையில் புதிய மதகுகள் அமைக்கப்பட்டி ருந்தன. கடந்த 2 மாதங்களாக கொரோனா  பொதுமுடக்கம் அமலாக்கத்தில் இருந்த நிலையில் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆத்தூரை  சேர்ந்த ஏழுமலை, கண்ணன் ஆகிய இரு வரும் புதிதாக கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் கட்டுமானத்தின் அருகில் குவித்து வைக்கப்  பட்டிருந்த கருங்கற்களை திருடிச் சென்று  அவர்கள் வீட்டில் குவித்து வைத்துள்ளனர். இதுகுறித்து கடந்த 7ஆம் தேதி உளுந்தூர்  பேட்டை நீர்ப்பாசன பிரிவு பொறியாளர் மற்றும் திருநாவலூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வர்களை பாதுகாத்திட, உள்ளூர் அளவி லேயே மூடி மறைக்க முயற்சித்து வரு கின்றனர். எனவே தாங்கள் நேரடியாக விசாரணை நடத்தி அணையின் கருங்கற்களை திருடிய வர்கள் மீது திருட்டு வழக்கு பதிந்து  கைது செய்ய வேண்டும். பொதுச்  சொத்தை மீட்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இந்த மனுவின் நகலானது வெள்ளாறு வடிகால் கோட்ட செயற்பொறி யாளருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்க 

திருவண்ணாமலை, ஜுன் 11- திருவண்ணாமலை  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்தவா சியை அடுத்த ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் மனைவி பிரேமா (54) கொடுத்த மனு வில், எனது கணவர் ஆணை போகி ஊராட்சி மன்றத் தலை வராக இருந்து வருகிறார். அவர் தேர்தலில் வெற்றி  பெற்றதால் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டி யிட்டு தோல்வியடைந்த கஜபதி (65) என்பவரும் அவ ரது ஆதரவாளர்கள் விஜி, சேகர், கிருஷ்ணன், ரேணு, கருணா உட்பட 150பேர் கடந்த மாதம் 22ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தினர். மேலும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இது  மட்டுமின்றி எனது சகோதரர் வெங்கடேசன் மனைவி மீரா வையும் அவமானப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்ட னர். இதற்கு காரணமான கஜ பதி மீது நானும், எனது சகோத ரர் மனைவி மீராவும் வணக்கம்பாடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே தாங்கள் இதுதொடர்பாக தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.

முதியவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, ஜுன் 11- திருவண்ணாமலை காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவரை கடந்த 2018ஆம் ஆண்டு கீழ்நாத்தூரை சேர்ந்த நாவ ரசு (22), வினோத்குமார் (21),  கீழாநாத்தூர் தவசி குளத்தைச் சேர்ந்த தீபன்  (24), தேவனந்தல் கிரா மத்தைச் சேர்ந்த அருண்  குமார் (21), திருவண்ணா மலை வேடியப்பன் கோவில்  தெருவைச் சேர்ந்த சந்திர குமார் (22) மற்றும் இரண்டு  சிறுவர்கள் கிண்டல் செய்  துள்ளனர். இதை தட்டிக் கேட்ட தாமரைச் செல்வியின் மாமனார் ஆறுமுகம் (50) என்பவரை 7 பேரும் விறகு கட்டையால் அடித்து  கொலை செய்தனர். இதில்  மற்ற அனைவரும் கைது  செய்யப்பட்ட நிலையில் தீபன் மட்டும் தலைமறை வானார். மேலும் கடந்த 2019 பிப்ர வரி 26ஆம் தேதி மதியம் சுமார் ஒரு மணிக்கு திரு வண்ணாமலை வெளிவட்ட சாலையில், ஏந்தல் ரயில்வே  மேம்பாலம் அருகே, திரு வண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் ரோந்து  சென்றபோது அங்கு கத்தி யைக் காட்டி வழிப்பறி செய்ய  முயன்ற கீழ்நாத்தூரைச் சேர்ந்த வினோத்குமார், நாவரசு, தினேஷ், தீபன், ஸ்டீபன் ஆகியோரை காவல்  துறையினர் கைது செய்ய முயன்றபோது தீபன் தப்பி சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த  9ஆம் தேதி  மெக்கானிக்காக வேலை செய்யும் திரு வண்ணாமலை பச்சையம்  மன் கோவில் தெருவைச்  சேர்ந்த சீனிவாசன் என்பவரி டம் அவலூர்பேட்டை சாலை  ரயில்வே கேட் அருகில் கத்தி யைக் காட்டி  ரூ.500 பணம்  பறித்ததாக கிடைத்த புகாரை யடுத்து தீபனை திருவண்ணா மலை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

நகைக்கடனாக ரூ. 100 கோடி வழங்க கூட்டுறவு மத்திய வங்கி இலக்கு 

கடலூர், ஜூன் 11- கடலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு  வங்கிகள் மூலமாக ரூ.100 கோடிக்கு  நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை சரி செய்யும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்  கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இந்த நிதி முதற்கட்டமாக கடலூர் மாவட் டத்திற்கு ரூ.100 கோடி வரப்பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் சொ.இளஞ்செல்வி கூறு கையில், கோவிட் - 19 சிறப்புத் திட்டமாக  கிராமுக்கு ரூ. 3 ஆயிரத்தில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் வசதி முதற் கட்டமாக மத்திய கூட்டுறவு வங்கிகள், 31 தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் மீத முள்ள 136 சங்கங்களிலும் 7.5 விழுக்காடு வட்டியுடன் தனிநபருக்கு ரூ.1 லட்சம் வரை யில் கடன் வழங்கப்படும். இதுவரையில் 2,371 பேர் இத்திட்டத்தில் கடன் பெற்றுள்ள னர். இத்திட்டத்தில் மொத்தம் ரூ.100 கோடி  வரையில் கடன் வழங்க இலக்கு நிர்ண யித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதலாக வும் வழங்கப்படும். இது மற்ற நேரங்களில் வசூலிக்கப்படும் வட்டியை விடவும், மற்ற  வங்கிகளின் வட்டியை விடவும் குறைவா னது என்றார். அதேபோல் பயிர்க்கடன் திட்டத்தில் 8,144  உறுப்பினர்களுக்கு ரூ.58.86 கோடி கடன்  வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவித் திட்டத்தின் மூலம் 93 குழுக்களுக்கு ரூ.74.65  லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கட னுக்கு முதல் 6 மாதம் கடன் செலுத்தா சலுகை  வழங்கப்படுகிறது. முன் வைப்புத்தொகை, காப்புத் தொகை, சேவை கட்டணம், நடை முறை கட்டணம் ஆகியவையும் வசூலிக்கப் பட மாட்டாது. எனவே, விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் அனை வரும் கூட்டுறவு வங்கிகளை நாட வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார்.

;