tamilnadu

img

புற்றுநோய் அணுக்களை திறம்பட அழிக்கும் மஞ்சள்: ஐஐடி

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத் தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையை பொறுத்தமட்டில் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.அந்தவகையில் மஞ்சள் மற்றும் ‘குர்குமின்‘ கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதை சென்னை ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப் பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

;