tamilnadu

img

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை:
அமமுக பொருளாளரும் சசிகலா, தினகரனின் ஆதரவாளருமான வெற்றிவேல் சென்னையில் காலமானார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் பி.வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி (அக்.15) காலமானார்.

கடந்த 6 ஆம் தேதி சளி காய்ச் சல் தொல்லை காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச் சனை காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டது. இந்த நிலையில் வியாழ
னன்று மாலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் வெற்றிவேல். பின்னர் அதிமுகவில் இணைந்த அவர், ஆர்.கே. நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி‌.தினகரன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “வெற்றிவேல் மறைவு கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.  ‘வெற்றிவேல்’ என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித் துள்ளார்.வெற்றிவேல் மறைவுக்கு கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர்.