tamilnadu

மக்களவை திமுக தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

சென்னை, மே 26-மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 25 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 19 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர், கட்சியின் மூத்த தலைவருர் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவை குழுவின்திமுக தலைவ ராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கனிமொழியும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக் கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, கொறடா வாக டி.கே.எஸ். இளங்கோவன்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களே எஜமானர்கள்; மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

;