tamilnadu

img

சிறப்பு மலை ரயில்

கோவை, ஜூன் 1-சுற்றுலா பயணிகளின் வரவேற்பை அடுத்து குன்னூர்-ரன்னிமேடு இடையே மீண்டும் ஒரு வாரம் சிறப்புமலை ரயில் இயக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இந்த மலை ரயில் ஜூன் மாதம் இறுதிவரை டிக்கெட் முன்பதிவாகியுள்ள நிலையில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு27 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தினந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ஜூன் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிவரை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.