tamilnadu

img

தென்னிந்தியாவில் விற்பனையை விரிவுபடுத்தும் டைட்டன்

சென்னை, ஜூன் 20- தமிழக அரசின் டிட்கோ- டாடா  கூட்டு நிறு வனமான டைட்டன் நிறு வனம் சென்னையில் சில்லறை வணிகத்தை விரிவு படுத்துவதாக அறி வித்துள்ளது. இந்நிறுவனம் கை கடிகாரங்களுக்கான 59 வது  தனிஷ்க் ஸ்டோர் பட்டுப்புட வைகளுக்கான தனீரா விற்ப னையகயத்தை சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் திறந்துள்ளது.

சர்வ தேச புகழ்பெற்ற கை கடிகாரங்களுக்கான ஹீலியோஸ் விற்பனை யகத்தையும் பாண்டி பஜாரில் பழைய குளோபஸ் ஷோரும் இருந்த இடத்தில் திறந்துள்ளது.  இந்த விற்பனையகங்களை  டைட்டன் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர். சி.கே. வெங்கடராமன், நிறுவனத்தின் உயரதிகாரி கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் முன்னி லையில் திறந்து வைத்தார்.

நடப்பு நிதியாண்டில் வளர்ந்து வரும் முதல் மற்றும்  இரண்டாம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்க ளில், சில்லறை  விற்பனை வணிகத்தை விரி வாக்க திட்டமிட்டுள்ள தாக அவர் கூறினார். டைட்டன் அனைத்து பிரிவுகளிலும் 100 க்கும் அதிக மான விற்பனையகங்களை வரும் ஆண்டுகளில் தொடங்க இலக்கு வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.