tamilnadu

பேச்சுவார்த்தை மூலம் வேலைநிறுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும் ஆண்ட்ரூயூல் நிர்வாகத்திற்கு சிஐடியு கோரிக்கை

சென்னை, ஆக. 29 - தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை கோரிக்கைகள் மீது ஆண்ட்ரூயூல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சிஐ டியு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலப் பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பொதுத்துறை யான ஆண்ட்ரூயூல் நிறுவனம் ஸ்விட்ச் கீயர் டிரான்ஸ்பார்மர் போன்ற மின் மாற்றி மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநி யோகித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணி செய்யும் தொழிலாளர்களின் ஊதியம் அதே பணியை செய்யும் இதர தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை விட மிகக் குறைவாகும்.  மேலும், 31.03.2017 அன்று ஊதிய ஒப்பந்தம் முடிவடை ந்த நிலையில் 01.04.2017 அன்று புதிய ஊதிய உயர்வுக்கான கோரிக்கை மனு சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன டிப்படையில் நிர்வாகத்துடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் ஊதிய உயர்வு சம்மந்தமாக எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் கடந்த ஆக.19 முதல் ஆண்ட்ரூயூல் தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஊதிய உயர்வு வழிகாட்டு தல் அன்ட்ரூயூல் நிறு வனத்திற்கு பொருந்தாது என்று கூறி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நியாய மாக அளிக்க வேண்டிய ஊதியத்தை அளிக்க மறுக்கிறது. தொழில்நுட்ப பணிகளை செய்யும் ஐடிஐ படித்த தொழிலாளர்களுக்கு இதர மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அளிக்கும் ஊதியமோ இதர சலுகைக ளோ கிடைப்பதில்லை. எனவே, மத்திய பொதுத்துறை நிறுவனங்க ளுக்கான ஊதியத்தை நிர்வாகம் அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை அவுட்சோ ர்சிங் விடக்கூடாது. பழிவாங்கும் நோக்குடன் கல்கத்தாவிற்கு பணியிட மாறுதல் செய்த தொழி லாளர்களை மீண்டும் சென்னைக்கு மாற்றம் செய்ய  வேண்டும் என்ற தொழி லாளர்களின் கோரிக்கை களை நிர்வாகம் விரைந்து பேசி தீர்வு கண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.

;