tamilnadu

திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

மீண்டும் கூடுதல் ஆணையரானார் கவிதா

சென்னை, ஜூன் 19- இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா-வின் தற்கா லிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கூடுதல் ஆணையராக (விசா ரணை) நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் சோமாஸ் கந்தர் சிலை பழுதடைந்த தால் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.  இதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார்  எழுந்ததையடுத்து இந்து சமய அறநிலை யத்துறை கூடுதல் ஆணையர் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கவிதா சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். அவருடைய பணியிடை நீக்க  உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை  உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டது. இதனையடுத்து தற்காலிக பணி  நீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கூடு தல் ஆணையராக (விசாரணை) நியமித்து  பணியில் சேர இந்து சமய அறநிலை யத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களை தடுப்பதால் மின்உற்பத்தி பாதிக்கும்

திருவள்ளூர், ஜூன் 19 -  மின் ஊழியர்களை பணிக்கு செல்ல விடாமல்  காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணி யாற்றும் தொழிலாளர்கள் மீஞ்சூர், எண்ணூர்,  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்டு பகுதி களிலிருந்து செல்கின்றனர். மீஞ்சூர் பகுதியி லிருந்து பணிக்கு சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அடையாள அட்டை காண்பித்தபோதும் பணிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதன்பின்னர் மின் நிலைய தலைமைப் பொறி யாளர், மாவட்ட ஆட்சியருடன் பேசிய பிறகு 3 மணி நேரம் காலதாமதமாக தொழிலாளர்களை பணிக்கு செல்ல அனுமதித்தனர். இது குறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்புன் தலைவர் வெங்கடய்யா கூறுகையில், அடை யாள அட்டை இல்லாததால் ஏராளமான தொழி லாளர்கள் பணிக்கு வர முடியவில்லை. எனவே,  ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் நிர்வாகம் அடையாள அட்டை வழங்க  வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

திருவெண்ணைநல்லூர் அருகே மணல் குவாரியை மூட வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூன் 19- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட அண்ட்ரா யநல்லூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,  அரசு சார்பில் திறக்கப்பட்ட  குவாரியை மூடவேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட டி. புதுபாளையம் கிராமம் அருகே அண்ட்ராயநல்லூர் எல்லையில் தென் பெண்ணை ஆற்றில் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி அமைக்க அரசு முயற்சித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே ஆற்றில் பல மீட்டர் ஆழத்துக்கு மணல் கொள்ளை போனதால் சுற்றி யுள்ள 10க்கும் மேற்பட்ட கிரா மங்களில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், மணல் எடுப்பதை அரசு நிறுத்தியது. இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் பொது நல வழக்கு  தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு காலத்திலும் அவ சர அவசரமாக கடந்த 3 நாட்க ளாக காவல்துறை பாது காப்புடன், மக்களின்  எதிர்ப்பையும் மீறி, விதி முறைகளை காற்றில் பறக்க விட்டு இரவு பகலாக மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.  சுப்பிரமணியன் முதலமைச்ச ருக்கு எழுதியுள்ள கடி தத்தில், “சட்டவிரோதமாக செயல்படும் அண்ட்ராய நல்லூர் மணல் குவாரியை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

;