மே மாத சம்பளம் வழங்க வேண்டும் பகுதிநேர ஓவிய ஆசியர்கள் கோரிக்கை
திருவள்ளூர், ஜூன் 12- பகுதி நேர ஓவிய ஆசிரி யர்களாக பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதா, 16 ஆயிரத்து 549 ஆசி ரியர்களை இசை, கணினி, ஓவியம், விளையாட்டு ஆகிய பாடப்பிரிவுகளில் பணியாற்ற பகுதி நேர ஊழியர்களாக பணியமர்த்தினர். இதில் 34 பார்வையற்றோர் உள்ளிட்டு 198 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இந்த மாற்றுத் திறனாளிகளில் 5 பேர் திரு வள்ளூர் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களுக்கு 12 மாதம் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தாலும், மே மாத ஊதியம் மறுக்கப்படுகிறது. இந்நிலை யில் மே மாத ஊதியம் வழங்காததை அறிந்த மாவட்ட ஆட்சியர், சோழவ ரம் அடுத்த மாபூஸ்கான் பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான நலச் சங் கத்தின் மாவட்டத் தலை வரும் பகுதிநேர ஆசிரியரு மான டி.ஆனந்தக்குமாரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார்.
இதனையேற்று மே 25 அன்று ஆட்சியர் அலுவல கம் சென்ற ஆனந்தக்குமாரி டம், ஆட்சியர் குறைகளைக் கேட்காமல், மனுவையும் பெறாமல், மளிகை பொருள் அடங்கிய நிவாரண தொகுப் பினை வழங்கினார். 2 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரைவதற்காக ஆணையை வழங்கினார். இதன்பின்னர் வெளியே வந்த ஆட்சியர், மாவட்டத் தில் உள்ள 14 ஒன்றியங்களி லும் கொரானா விழிப்பு ணர்வு ஓவியங்கள் பள்ளி கட்டிட சுவர்களில் வரைவ தற்கான ஆணை வழங்கப் பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, மே 29 அன்று சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தமக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ஆனந்தகுமார் திரும்ப ஒப்படைத்துள்ளார். வறுமையில் வாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 151ன் படி முழு நேரமும் பணி செய்ய தயாராக உள்ளவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி
வேலூர், ஜூன் 12- வேலூர் மாவட்டம் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (39), பெருமாள் (32) இருவரும் பெயிண்டர்களாக வேலை செய்து வருகின்றனர். இருவரும் வழக்கம் போல பெயிண்டிங் வேலைக்காக சோளிங்கர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்து வாச்சாரி காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் வழக்கு: ஆணையர்
சென்னை, ஜூன் 12- கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்ப டுத்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள், அவர்க ளின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்ப டுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட சில நபர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்று சென்று வந்த 40 நபர்கள் மீது புகார் செய்து, காவல்துறையினரால் வழக்கு பதியப் gட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களை யும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்க ளையும் கோவிட்-19 மையங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற நான்கு பேருக்கு ரூ.4 லட்சம் அபராதம்
திருநெல்வேலி. ஜூன் 12- சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் துப்பாக்கி யுடன் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. இதனை தடுக்க கோரி வனத்துறையினருக்கு கோரிக்கை கள் சென்றன. சிவகிரி தெற்குப் பிரிவு கருப்பசாமி கோவில் பீட் வனப்பகுதியில் சிலர் முயல், காட்டுபன்றி கள், மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றிருப்பதாக வனத்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமை யில் சிவகிரி தெற்குப்பிரிவு வனபழகுநர் பூவேந்தன், வடக்கு பிரிவு வனவர் முருகன், வாசுதேவநல்லூர் வனப்பிரிவு வனவர் உபேந்திரன், வனக்காப்பா ளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதி கண்ணன், வனக்காவலர் செல்வராஜ், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அவர்கள் கருப்பசாமி கோவில் பீட் வனப்பகுதி யில் உள்ள தனியார் தோட்டம் பகுதியில் சென்ற போது,அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆத்துவழி கிராமம் பள்ளிவாசல் தெரு வைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமமூர்த்தி (வயது 56), ராமமூர்த்தி மகன் செல்வகுமார் (21), விசுவ நாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சேர்ந்த முரு கேசன் மகன் சூரியபிரகாஷ் (27), சண்முகவேல் மகன் ஜெகநாதன் (53) ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடு வதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்கு களை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிடுவ தற்காக வந்தது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தர வின்பேரில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் வனத்துறை யினர் அபராதம் விதித்தனர்.