tamilnadu

img

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் திருப்போரூர்

வாகன நிறுத்தம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர் போரூராட்சியில் நாள்தோறும் போக்குவரத்து நெரி சல் அதிகரித்து வருகின்றது. இதைத் தவிர்க்க வாகன நிறுத்தங்களை ஏற்படுத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் வழியில் திருப்போரூர் பேரூராட்சி உள்ளது. 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  திருப்போரூர் நகரைச் சுற்றிலும் கோவளம், திரு விடந்தை, மாமல்லபுரம், முட்டுக்காடு ஆகிய சுற்றுலாத் தலங்கள் அமைந் துள்ளன. திருப்போரூர் வழியாக சுற்று லாப் பயணிகள் மேற்கண்ட பகுதி களுக்கு செல்லும் நிலை உள்ளது. திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயில் அறுபடை கோவில்க ளுக்கு நிகரான கோவிலாக கருதப்படு வதால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மட்டு மின்றி தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் நாள் தோறும்  வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

திருப்போரூர் கந்தசாமி கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்கு மாட வீதிகளிலும் 30க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் ஒன்றில் கூட வாகன நிறுத்து மிடம் இல்லை. திருமண நாட்களில் இந்த திருமண மண்டபங்களிலும் கோவிலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு நடைபெறும் திருமணங்க ளிலும், கோவில் விசேஷ நாட்களி லும், திருப்போரூர் நகருக்குள் வருப வர்களின் வாகனங்களை நிறுத்த பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் வாகன நிறுத்தும் இடத்திற்கான வசதிகளை இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால் நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நகருக்குள் இருக்கும் அனைத்து சாலைகளிலும் இருபுறங்க ளில் நிறுத்தும் நிலை உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள திருப்போரூர் நகரின் வழியாகவே மாமல்லபுரம், திருவிடந்தை, கோவளம் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் சுற்றுலா வாகனங்களும், சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இயக்கப்படும் நூற்றுக்கணக்கான மாநகரப்பேருந்து களும் நாள்தோறும் இப்பகுதியில் செல்வதாலும், சாலை மிகக் குறு கலாக இருப்பதாலும் திருப்போரூர் நகர் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றது. குறிப்பாகத் திருமண நாட்களிலும், கிருத்திகை, ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை  உள்ளிட்ட விசேஷ நாட்க ளில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்காக உயரும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் உள்ளூர் மற்றும் வெளி யூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளா கின்றனர். குறிப்பாகப் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். திருமணம் முடிந்தும் மதியம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாதாளச் சாக்கடைத் திட்டம்

தற்போது திருப்போரூர்  பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 42 கோடி மதிப்பீட்டில் 15 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் அனைத்து தெருக்களும் பள்ளம் தோண்டப்பட்டு சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் சாலைகளின் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் நகர மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் புழுதி கிளம்புவது ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. கடந்த  2017ம் ஆண்டு துவங்கிய இந்த பணி மந்த கதியில் நடைபெற்று வருவதும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாகவும் உள்ளது. மேற்கு மாட வீதி நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலும், தெற்கு மாட வீதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் மற்ற சாலைகள் பேரூராட்சி கட்டுப் பாட்டிலும் உள்ளதால் சாலைகளைச் சீரமைப்பதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகின்றது.

கோவில் நிலத்தில் வாகன நிறுத்தம்

இதுகுறித்து திருப்போரூர் பகுதியைச் சார்ந்த லிங்கன் கூறுகை யில், பேரூராட்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் ஒன்றில் கூட வாகன நிறுத்துமிடம் இல்லை. திருமண நாட்களில் மண்டபங்களிலும், கோவி லிலும் ஏராளமான திருமணங்கள் நடை பெறுகின்றன. இதுபோன்ற நேரங்களில் நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த  தனி இடம் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட நிலம் 60 ஏக்கர்  உள்ளது. இந்த இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கக் கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மந்தமாக பாதாள சாக்கடை நிறுத்தம் திருப்போரூரைச் சார்ந்த பிரசன்ன சாமி கூறுகையில், பழைய மாமல்ல புரம் சாலை தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களின்  மையப்பகுதியாக உள்ளது. கந்தசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த மாத இறுதியில் கந்தசாமி கோவில் தேரோட்டம் நடை பெறவுள்ளது.  இதற்குப் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்ல உள்ளனர். தற்போது கடுமையான வாகன நெருக்கடியில் திருப்போரூர்  சிக்கித் தவிக்கின்றனர். இதற்குக் காரணம் மந்தமாக நடைபெறும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணி மற்றும் வாகன நிறுத்தம் இல்லாததே காரணம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாகன நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

சிபிஎம் கோரிக்கை

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கரிடம் கேட்டபோது, திருப்போரூர்  வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதிக்கு மிக அருகிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதாலும்  திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு   பேரூராட்சி நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்சனை யில்  தலையிட்டு உரிய முடிவினை எடுக்கவேண்டும் என்றார். மேலும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வாக்குறுதி

பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்ட போது வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்கான இடவசதி பேரூராட்சியிடம்  இல்லை. கோவில் நிர்வாகத்திடம் போதிய இடவசதி உள்ளது. அவர்கள் இடம் ஒதுக்கிக் கொடுத்தால் வாகன நிறுத்துமிடம் பேரூ ராட்சி மூலம் வசதிகள் செய்து தரப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பணிகள் முழுமையாக ஜூலை 2020ல் முடிவடையும். தற்போது இந்த  பணிகள் நடைபெற்று வருவதால் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியவில்லை. தற்போது கந்தசாமி கோவில் திருவிழா நடைபெற இருப்பதால்  நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள மேற்கு மாடவீதி( பழைய மாமல்லபுரம் சாலையை) வருகின்ற 25ம் தேதிக்குள் சீரமைக்க உள்ளோம்.

வாகன நிறுத்துமிடம்

கந்தசாமி திருக்கோவில் செயல் அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது கோவில் மொட்டை அடிக்கும் இடத்திற்குப் பின்னால் 3 ஏக்கர் இடம் உள்ளது. பள்ளமாக உள்ள இந்த இடத்தை மண் கொட்டி முழுவதுமாக வாகன நிறுத்துமிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கான நிதியினை சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் ஒதுக்கித்தருவதாகக் கூறியுள்ளார். விரைவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்றார். திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனிடம் கேட்டபோது வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்குக் கோவில் நிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தை சீரமைப்பதற்கான  பணிகளைத் துவக்குவது குறித்து  கோவில் செயல் அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் அடுத்த வாரம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதற்காக செய்யப்பட இருக்கும் நிதி நிர்ணயிக்கப்பட்டு உடனடியாக பணி துவங்கப்படும் என்றார்.  

- க.பார்த்திபன்