tamilnadu

img

இன்னும் 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் இருக்கும்

சென்னை:
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட் டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்  முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை (107 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகக் கூடும்.

எனவே, அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையைப் பொருத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;