tamilnadu

img

தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கியது

சென்னை, ஆக. 21- அடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்குப் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினர் முன்னிலையில் காவல் துறையினரால் தண்ணீர் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டு ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத திருட்டு வழக்கு பதிவு செய்வதைக் கண்டித்தும், நிலத்தடி நீரை கனிமவளத்தில் இருந்து நீக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 4,500க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது.