tamilnadu

img

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடி!

மேட்டூர் அணை நீர்மட்டம், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 120.10 அடியாக இருந்தது. நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆகும். அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 73 ஆயிரத்து 330 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக இருந்தது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக விநாடிக்கு 48 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.