சென்னை, மே 10-கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2018, நவம்பர் 16 ஆம் தேதி வீசிய கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னைமரங்கள் அதிகளவில் சாய்ந்தன. இதனிடையே கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இனியவன் உட்பட 140 பேர் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேதாரண்ய நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிகிழமை (மே 10) உத்தரவு பிறப்பித்துள்ளது.