tamilnadu

img

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் பிரமாண்ட காட்சிகளை மனதில் நிறுத்தும் என்பதாலும், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களாலும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.  

இந்தப் படத்திலிருந்து நடிகர்களின் தோற்றப் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவரும் நிலையில், இன்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.