சென்னை, டிச.23- சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திங்களனறு (டிச.23) வெளியிட்டார். இதில் மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ள னர். பெரிய தொகுதியாக வேளச்சேரி உள்ளது. இதில் மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியான துறை முகத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 629 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:- டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்:- ஆண்கள்-120383, பெண்கள்-129038, இதர வாக்காளர்கள் 104, மொத்தம்-249525. பெரம்பூர்:- ஆண்கள்- 145606,
பெண்கள்- 149562, இதர வாக்காளர்கள் 63, மொத்தம்-295231. கொளத்தூர்:- ஆண்கள்-132209, பெண்கள்-137169, இதர வாக்காளர்கள் 65, மொத்தம்- 269443. வில்லிவாக்கம்:- ஆண்கள்-122380,
பெண்கள்- 126760, இதர வாக்காளர்கள்- 60, மொத்தம்-249200. திரு.வி.க.நகர்:- ஆண்கள்- 102253, பெண்கள்-108229, இதர வாக்காளர்கள் 49, மொத்தம்-210531.
எழும்பூர்:- ஆண்கள்- 90278, பெண்கள்-91821, இதர வாக்காளர்கள்-49, மொத்தம்-182148. ராயபுரம்:- ஆண்கள்- 88211, பெண்கள்-91617, இதர வாக்காளர்கள்-47, மொத்தம்-179875. துறைமுகம்:- ஆண்கள்- 88483, பெண்கள்-81087, இதர வாக்காளர்கள்-50 169620. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி:- ஆண்கள்-111482, பெண்கள்-115592, இதர வாக்காளர்கள்-28, மொத்தம்-227102.
ஆயிரம் விளக்கு:- ஆண்கள்-115297, பெண்கள்-120178, இதர வாக்காளர்கள் 85, மொத்தம்-235560. அண்ணாநகர்:- ஆண்கள்-135470, பெண்கள்-139862, இதர வாக்காள ர்கள்-79, மொத்தம்-275411. விரு கம்பாக்கம்:- ஆண்கள்-137958, பெண்கள்-138177, இதர வாக்கா ளர்கள் 82, மொத்தம்-276217. சைதாப்பேட்டை:- ஆண்கள்-133413, பெண்கள்-137851, இதர வாக்காள ர்கள் 71, மொத்தம்-271335.
தியாகராய நகர்:-ஆண்கள் 115248, பெண்கள்-117915, இதர வாக்காளர்கள்-39, மொத்தம்-233202. மயிலாப்பூர்:- ஆண்கள்-126490, பெண்கள்-133838, இதர வாக்காள ர்கள்-36, மொத்தம்-260364. வேளச்சேரி:- ஆண்கள்-150557, பெண்கள்-153270, இதர வாக்காள ர்கள்-82, மொத்தம்-303909.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 10 மற்றும் 13 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? அல்லது இல்லையா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜனவரி 1 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (01.01. 2002-ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பட்டிய லில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகு திக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் ‘8-ஏ’ யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்த ப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவல கத்தில் 23.12.2019 முதல் 22.01.2020 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். ஜனனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்று க்கிழமை) வாக்குச்சாவடி மையங்க ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை அளிக்கவும், இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படு த்திக் கொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.