சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த 6 மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இன்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், போரூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பல பள்ளிகள் விடுமுறை விடும் சூழல் உருவானது. பல ஓட்டல்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று மழை பெய்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.