சென்னை, மார்ச் 8- சென்னை அரும்பாக் கத்தில் பிரகாஷ் என்பவர் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அங்கு ஜூஸ் குடித்த ஒருவர் பணம் கொடுக்காமல் ரவுடி என்று கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து, விசாரித்த காவல்துறையினர் குரங்கு சரவணனை கைது செய்த னர்.
பிறகு, கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்த காவல்துறையினர், சர வணனை குரங்கு என்ற குறிப்பிட்டிருந்தனர். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதி பதி லிங்கேஸ்வரன் பட்டப் பெயர், அடைமொழியை நிறுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தர விட்டார். மேலும்,வழக்கு ஆவணங்களில் இருந்து குரங்கு என்ற வார்த்தையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.