tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோவையில் ஜன.22ல் பேரணி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிறது

சென்னை, ஜன. 8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் எஸ்.பாலா, மாநில நிர்வாகிகள் சி.பால சந்திரபோஸ், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், செ. மணிகண்டன், பி.கோபிநாத், மபா.நந்தன், மு.பிரிய சித்ரா, சுசீந்திரா உள்ளிட்டு மாநிலக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய அரசாங்கம் தேசிய குடியுரிமை திருத்தச்  சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் அசாம் மாநிலத்தைப் போலத் தேசிய குடி மக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என அறி வித்துள்ளது. பாஜக அரசின் மோசமான நடவ டிக்கையால் அசாமில் தயாரிக்கப்பட்ட தேசிய குடி மக்கள் பதிவேட்டின் மூலம் ஏற்கனவே சொந்த  மக்களாக வாழ்ந்த 19 லட்சம் பேர் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இந்திய ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி மற்றும் இந்திய ராணு வத்தில் பணியாற்றி மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற இராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்குக் கூட குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு  முழுவதும் போராடி வரும் மக்கள் மீது கொடூர மான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் கொடூரமான தாக்குதலைத் துணை ராணுவப் படையினர் மூலம் தொடுக்கப்பட்டது. கடும் அடக்குமுறைக்குப் பின்ன ரும் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட் டங்களின் விளைவாக மத்திய அரசாங்கம் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு தயா ரிக்கப்பட மாட்டாது என நாடகமாடுகிறது. அதே நேரம் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயா ரிப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. உண்மையில் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று  பின்னிப் பிணைந்தவை என்பதை நாடு அறியும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்  மையைப் பாதுகாக்க வேண்டிய அரசு இந்தியா வில் வசிக்கக்கூடிய மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
கோவையில் ஜன.22ல் பேரணி
எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், கேரளா மாநிலத்தைப் போல, குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்ட  மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தி 2020 ஜனவரி 20 அன்று  திருச்சியிலும், ஜனவரி 22 அன்று கோயம்புத்தூரி லும் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் தனியாருக்கா?
மத்திய அரசின் நிதி அயோக் இந்தியா முழுவதும்  உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு  மருத்துவமனைகளை முழுமையாகத் தனி யாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு பகுதி  பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைத்து பணம்  பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிப்பது எனத் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.  ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ், பரிசோதனைக் கூடம், துப்புரவுப் பணி, பாதுகாப்புப் பணி உள்ளிட்டவற்றைத் தனியார் காண்ட்ராக்ட் நிறு வனங்களிடம் ஒப்படைத்த அரசு தற்போது முழு  மருத்துவமனையையும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம் போட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்து வமனை எனப் பெயர் வைத்துக்கொண்டு காசுக்கு வைத்தியம் என்ற சூழலை மத்திய பாஜக அர சாங்கம் உருவாக்கி வருகிறது. இந்திய நாடு முழு வதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய  மக்களின் மருத்துவச் சிகிச்சைக்கு, உயிர் பாது காப்புக்கு என இருந்த அரசு மருத்துவமனைகள் இனி காசு உள்ளவருக்கு மட்டுமே என்ற மோச மான நிலைக்குத் தள்ளப்படும். இதுபோன்ற நட வடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், மத்திய அரசு இத்தகைய முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இத்தகவலைச் சங்கத்தின் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஒரு  அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;