tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சாலையில் கொட்டிய மணலை சுத்தம் செய்த காவலர்

செங்கல்பட்டு, ஜூன் 11- செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்சாண்ட் சிதறி கீழே கொட்டி விட்டது.

சாலையில் விரைவிக்கிடக்கும் எம்சாண்ட் மணலால் இருசக்கர வாகனங்கள் கடந்து சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அறிந்த மறைமலைநகர் போக்குவரத்து காவலர் மணிகண்டன் ஒப்பந்த ஊழியர்களுடன் சாலையில் சிதறிய மணலை சுத்தம் செய்தார்.

இந்த காட்சியை வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். போக்குவரத்து காவலர் மணிகண்டன் அவரின் இந்த செயலுக்கு சக காவலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம், ஜூன் 11 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 914 பள்ளிகளில் ஆதார் புதுப்பிக்க வேண்டிய மாணவர்களை கணக்கெடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆதார் அட்டை வழங்கப்பட்டுவருகிறது.

கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல திட்டங்களை மாணவர்கள் பெற ஆதார் எண் அவசியம். இதில் ஏற்படும் திருத்தங்களை சரி செய்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் பிள்ளையார் பாளையம் சி.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் பார்வையிட்டு துவக்கி வைத்தனர்.

ரவுடி படுகொலை

சென்னை, ஜூன் 11- திருவொற்றியூரில் மாமூல் தகராறில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவொற்றியூர் அஞ்ச கம் நகரை சேர்ந்தவர் ரவுடி ராசையா (27). இவர் மீது கொலை உட்பட 20 வழக்குகள் உள்ளன. திங்கட்கிழமை இரவு அஜாக்ஸ் பேருந்து நிலை யம் அருகே ராசையா நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்த போது, வெட்டப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடசென்னையில் இன்று மின்தடை

சென்னை, ஜூன் 11- வடசென்னையில் புதனன்று (ஜூன் 12) வியாசர்பாடி, மாதவரம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 சென்னையில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் வியாசர்பாடி, மாதவரம் (லெதர் எஸ்டேட், கே.கே.ஆர். டவுன்) கம்பன் நகர், முல்லை தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணேஷ் நகர், சீனிவாச பெருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர் 1ஆவது மெயின் ரோடு, எம்எம்டிஏ பகுதி, எடைமா நகர், ஆவின் குடியிருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், சி.எம்.பி.டி.டி., தாதன்குளம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநி யோகம் கொடுக்கப்படும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.