காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு பொருளாளரும் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினருமான மதுசூதனனின் மகள் ம.சிந்து - செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரமும் நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ. 5 ஆயிரமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் மதுசூதனன் வழங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்