tamilnadu

கோவில் பணியாளர்கள் குடும்பநல நிதி உயர்வு

சென்னை, ஜூன் 3-கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித் துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள கோவில் களில் பணியாற்றும் திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தின ருக்கு குடும்ப நல நிதி வழங்க மைய நிதி ஏற்படுத்தப்பட்டது.அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையைக் கொண்டு நிதி உதவி வழங்கவும், இதற்காக திருக்கோவில் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து மாத சந்தாவாக ரூ.15 பிடித்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.இதன்படி பணியில் இருக்கும்போது திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தி னருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், இந்த தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் ரூ.1 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டது.இந்த தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என்றும், இதற்காக பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூலிக்கப்பட்டு வரும் தொகையை ரூ.60 ஆக உயர்த்தலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (பணீந்திர ரெட்டி) அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.மேலும், வைப்பு நிதியில் இருந்து பெறப்படும் வட்டித்தொகைiக் கொண்டு குடும்ப நலநிதி உதவி வழங்க முடியும், கூடுதல் நிதிச்சுமை இருக்காது, மைய நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் தெரிவித்திருந்தார்.இதை பரிசீலனை செய்து திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட கேட்டுக் கொண்டார். இந்து சமய அறநிலை யத்துறை ஆணையரின் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.