தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 18ம் ஆண்டு அமைப்பு தினமான திங்களன்று (மே 18) சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் (ஐசிடிஎஸ்) இயக்குநர் அலுவலக வாயிலில் சங்கக் கொடியை மாநிலச் செயலாளர் சித்ரசெல்வி ஏற்றினார். மாநில துணைத் தலைவர் ஹேமப்பிரியா, மாவட்ட தலைவர் நிர்மலா, பொருளாளர் விஜியலஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.