tamilnadu

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பேரணி

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் செவ்வாயன்று (நவ.12) பேரணி நடைபெற்றது.பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச்செயலாளர் எம்.அந்தோணிசாமி எழுச்சியுரையாற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தலைவர் ஆர்.கேசவன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.சுபந்தி, மாவட்டப்  செயலாளர் இ.குப்பம்மாள், பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி , முன்னாள் மாநில செயலாளர் எஸ்.சொர்ணம், ஜாக்டோஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. சத்திய நாதன், மாநிலசெயற்குழு உறுப்பினர் கோபிநாதன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*****************

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக நியமித்து, காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று திருவள்ளூர் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.சிவா தலைமை தாங்கினார்.   செயலாளர் ஏ.சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.மணிகண்டன், மகளிர் குழுவின் அமைப்பாளர் வெண்ணிலா, மாவட்ட துணை நிர்வாகிகள் தேவதிசயம், நாகராஜன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் நிறைவுரையாற்றினார். முன்னதாக  அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் டில்லிபாய் நன்றி கூறினார்.