சென்னை, ஜூலை 24 - இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஒன்றிய அரசின் வெளி யுறவுத் துறை அமைச்சருக்கு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் - பாம்பனைச் சேர்ந்த 9 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால், செவ்வா யன்று அதிகாலை கைது செய்யப் பட்ட பின்னணியில், இந்த கடிதத்தை முதல்வர் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படை சிறை பிடித்த மீனவர்களையும், படகுகளையும் உட னடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 வரை இலங்கை கடற்படை யினரால் 250 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், இலங்கை சிறையில் உள்ள 87 மீன வர்கள், 175 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.