tamilnadu

img

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை:
கொரோனா தடுப்பு ஊரடங்கு உள்ள நிலையில் தமிழ்நாட்டி லிருந்து வேலைக்காக வெளிமாநிலம் சென்றவர்களை  சொந்த மாநிலத்திற்கு அழைத்து வர நடவடிக்கைஎடுக்க வேண்டும். வெளி மாநிலங் களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ள தொழி லாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:ஊரடங்கு அமலில் உள்ளதின் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து கேரளா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சென்றவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல்  தவித்து வருகின்றனர். இதில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் உள்ளனர். அவர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான உரிய ஏற்பாடு களையும், அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத் தொழி லாளர்களை அவரவர் சொந்த மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

உதாரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக மும்பையில் இருந்தும் பல தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப வருவதற்கு தவித்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் சரியானஇடமில்லாமலும், வருமானமில்லா மலும், உணவிற்கும் வழியில்லாமலும் பரிதவித்துக் கொண்டிருக் கின்றார்கள். மகாராஷ்டிரா அரசு அவர்களை அனுப்புவதற்கு தயாராகஇருந்தாலும் தமிழக அரசிடமிருந்து உரிய தகவல் வந்தால்தான் அனுப்ப முடியும் என்று கூறுவதாகத் தக வல்கள் வருகின்றன.  மேலும், இன்னும் ஒரு மாதத்தில் மகாராஷ் டிராவில் பருவமழை துவங்க இருப்பதால் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற அவர்கள் தண்ணீரில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அவர்களை உடனடி யாக தமிழகத்திற்கு அழைத்து வரத் தக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்.அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 405 பேர் வேலைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக தமிழ கத்திற்கு திரும்ப முடியாமல் உள்ளஅவர்களை கேரள மாநிலத்தி லிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் எங்கெங்குஎவ்வளவு பேர் தங்கியுள்ளனர் என்கிற பட்டியல் இணைக்கப் பட்டுள்ளது.

அதைப்போன்று ஊரடங்கின் காரணமாக கூடங்குளம் அணுமின்நிலையம் தற்போது இயங்க வில்லை. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழி லாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்தநிறுவனங்களின் மூலம் வேலைசெய்து வருகிறார்கள். தொழிற்சாலைகள் இயங்காத காலத்திலும் அங்கு வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும் கூட, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இயங்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கவில்லை. இதனால், வடமாநிலத் தொழி லாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லா மல் தவித்து வருகின்றனர்.  2400 பேர் மட்டுமே தங்கும் அளவு கொண்ட ஆஸ்பெட்டாஸ் கட்டிடங்களில் 4800 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தங்களை தங்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள்.

எனவே, அணுமின் நிலையத்தில் தங்கியிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை அவரவர்சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் தாங்கள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அவர் களுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கிகளையும் உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர்,மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி, சோழவரம், பூந்தமல்லி உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். இரும்பு,  உருக்கு ஆலைகள், அனல்மின் நிலையங்கள், கப்பல் கட்டும் நிறுவனம், குடோன்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பு கின்றனர். ஆனால் நிர்வாகம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதைத் தடுத்து வேலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்து கிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே, தாங்கள்இவ்விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு மேற்கண்ட தொழிலாளர் களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை சம்பந்தப் பட்ட கம்பெனி நிர்வாகங்கள் வழங்குவதற்கும், சொந்த ஊர்களுக்குச் செல்ல திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உத்தரப்பிரதேசம், பீகார் போன்றமாநிலங்களை சேர்ந்த தொழி லாளர்கள் கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் களுக்கு திரும்ப செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில்நிலையங் களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார். 

;