tamilnadu

img

கமல்ஹாசனுக்கு சம்மன்

சென்னை, மார்ச் 1- இந்தியன் - 2 படப்பிடிப்பு தள விபத்து  தொடர் பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப் பில் ராட்சத கிரேன்கள் விழுந்ததில் 3 பேர் பலி யாகினர்.  இந்நிலையில்  இந்தியன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரி டம் விசாரணை நடத்தினர்.இதையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  நாளை சென்னை வேப்பேரி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.