சென்னை, மே 12- மாற்று இடம் வழங்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.சி. ரோடு, ஜி.ஏ. ரோடு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. விற்பனை நகரக் குழு உறுப்பினர் கே.பலராமன் தலைமை தாங்கி னார்.
எம்.சி.ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வானந்தன் பேரவையை துவக்கி வைத்தார். வண்ணாரப்பேட்டை வள்ளலார் பெரிய மார்க்கெட் வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் டி.வெங்கட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். காசிம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு நடைபாதை வியாபாரிகளுக்கு அருகாமையில் மாற்று இடம் தராமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, வெண்டிங் கமிட்டி அடையாள அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக கே.பலராமன், செய லாளராக பாக்யலட்சுமி, பொருளாளராக ரபீக் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.