tamilnadu

img

வெங்காயம் விலை உயர்வு: அரசு மீது ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை:
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும் நியாயமான விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் வெங்காய விலை உயர்வு நிலவினாலும் மற்ற மாநிலங்கள் நிலமையை பெருமளவு சமாளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.மாநில அரசுகளின் நடவடிக்கையால் மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெங்காய விலை கட்டுக்குள் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெங்காயம் மட்டுமின்றி பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் பற்றாக்குறையால் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடமிருந்து அந்நியப்பட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

;