tamilnadu

சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

சென்னை, நவ. 14- சபரிமலை செல்லும் பக்தர்களின் வச திக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்  சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ.15 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி  வரை அதிநவீன சொகுசு பேருந்துகள்  இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. குறிப்பாக சென்னையிலிருந்து 55  பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுவை  ஆகிய இடங்களிலிருந்து தலா 2 பேருந்து களும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in,  www.busindia.com, www.paytm.com,  www.makemytrip.com, www.goibgo.com  உள்ளிட்ட இணையதள முகவரிகள் வாயி லாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என வும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்  லாது பேருந்துகள் பற்றிய விவரங்களையும் 9445014412, 9445014450, 9445014424, 944501 4463, 9445014416 உள்ளிட்ட செல்போன் எண்க ளின் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள லாம் என போக்குவரத்துக் கழகம் தெரி வித்துள்ளது.