சென்னை:
விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும்அறிக்கையில் வருமாறு:கேரளாவை போல் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது.வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக்கிழங்கு, காய்கறிகள் பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன.விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி தீபாவளி நேரத்தில் இடைத்தரகர்களால் விலையேற்றம் உருவாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.