சென்னை, செப். 5 - பெங்களூரு இராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமி ழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், அவரின் மன்னிப்பை தமிழ்நாடு மக்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறோம் என அரசு தலைமை வழக்க றிஞர் தெரிவித்ததை அடுத்து, ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.